ஜூலை 31 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்!

கொவிட் -19 தொற்றுநோயால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் செயற்பாடானது ஜூலை 31 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதன்படி ஜூலை 31 மற்றும் ஒகஸ்ட் 01 ஆம் திகதிகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து சிக்கித் தவித்த இலங்கைப் பிரஜைகளுடன் இரு விமானங்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பேஜ் தெரிவித்தார்.

இந்த இரண்டு விமானங்களினூடாக சுமார் 600 இலங்கையர்கள் நாட்டை வந்தடையவுள்ளனர்.

அடுத்த சில விமானங்கள் முக்கியமாக மத்திய கிழக்கு, குறிப்பாக சவுதி அரேபியா மற்றும் ஜோர்தான் போன்ற நாடுகளை மையமாகக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளன.

அட்மிரல் ஜெயநாத் கொலம்பேஜ் மேலும் கூறுகையில், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் 50, 000 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று கோரி தங்களது தொடர்புடைய தூதரகங்களில் பதிவு செய்துள்ளனர்.

அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டவுடன் இந்த இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் கொலம்பேஜ் மேலும் கூறியதுடன், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.