ஜிவி பிரகாஷ் நடிக்கும் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் ஏற்கனவே சுமார் 10 திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த திரைப்படத்தின் டைட்டில் சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டது.

எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த நிலையில் சற்று முன்னர் இந்த திரைப்படத்திற்கு ’வணக்கம்டா மாப்ள’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிவி பிரகாஷ் ஜோடியாக அம்ரிதா ஐயர் இந்த படத்தில் நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நாயகனாக நடிக்கும் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிவி பிரகாஷ் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு: இன்று மாலை ஃபர்ஸ்ட்லுக்