ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இது இலவசம்!!

Is Disney plus Hotstar free for Jio users in 2020? All about the Jio Disney  Hotstar offer - Republic World

ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டிகளை ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்க இருப்பதாக தகவல்.

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தள்ளிப்போன ஐபிஎல் போட்டிகள் ஒருவழியாக செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரை நடக்க இருப்பதாக பிசிசிஐ கடந்த வாரம் அறிவித்தது.

ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதாக அறிவித்தார்.

இதற்காக எல்லா அணி வீரர்களும் தங்கள் வீரர்களை அமீரகத்துக்கு அனுப்பும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜியோ மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இணைந்து ஐபிஎல் 2020 கிரிகெட் போட்டிகளை ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

 இந்த சேவை தேர்வு செய்யப்பட்ட பிரீபெயிட் சலுகைகள் மற்றும் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சலுகைகளுடன் வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.