
பிறக்கும் போது
வேற்று ஜாதியினர்
பிரசவிக்க மண்ணில்
பிறக்கிறாய்…!
இறக்கும் போது
வேற்று ஜாதியினர்
புதைத்திட மண்ணில்
புதைகிறாய்…!
இடையே வாழும்
வாழ்வில் மட்டும்
ஜாதி மதமென வெறி
ஆட்டம் கொண்டு ஏன் ஆடுகிறாய்…!
மதத்தை மறந்து
மனித மனதினை பார்..!
மண்ணில் நின்பெயர்
மணத்திடும்…!!!