சைஸ் ஜீரோவில் கீர்த்தி பாண்டியன்… இன்ஸ்டா புதுவரவு இவர்தான்!

நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் கவனம் ஈர்த்துள்ளன.

நடிகர் அருண் பாண்டியன் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைக் கொண்டது போல அரசியலிலும் இயங்கி வருகிறார். 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இந்நிலையில் தன் மகளை சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஆசையோடு இருந்த அவருக்கு தும்பா என்ற படத்தின் மூலம் அந்த ஆசை நிறைவேறியது.

ஆனாலும் அந்த படம் கவனிக்கப்படாததால் இப்போது மலையாளத்தில் ஹிட்டான ஹெலன் என்ற படத்தை ரீமேக் செய்து அதில் மகளை நடிக்க வைத்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தி தற்போது தனது சைஸ் ஜீரோ உடலுடன் கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். அந்த புகைப்படங்கள் அவரின் சகோதரி ரம்யா பாண்டியனின் புகைப்படங்கள் போல கவனத்தை ஈர்க்க ஆரம்பித்துள்ளன.