செல்வராகவன் பட போஸ்டரை வெளியிட்ட தனுஷ்!

செல்வராகவன் பட போஸ்டரை வெளியிட்ட தனுஷ்!

பிரபல இயக்குனர் செல்வராகவன் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்றும் அந்தத் திரைப்படத்திற்கு”சாணிக் காயிதம்” என்ற டைட்டில் வைக்கப்பட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேசும் உட்கார்ந்து இருக்கும் வகையிலான இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரின் புகைப்படம் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த படத்தை ஸ்கிரீன் சீன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே ராக்கி என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பது தெரிந்ததே இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும்போது இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது உறுதியாகிறது.