செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உலகத்துக்கான உற்பத்தி மையமாக இந்தியா திகழ்ந்திட வேண்டும் – பிரதமர் மோடி

ரெய்ஸ்-2020 எனும் செயற்கை நுண்ணறிவு மெய்நிகர் மாநாட்டை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் ஆகியவை இணைந்து 5 நாட்கள் நடத்தி வருகிறது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு பற்றிய விவாதத்தை ஊக்குவிக்க இது ஒரு சிறந்த முயற்சி எனவும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதனின் அறிவாற்றலுக்கான சமர்ப்பணம் எனவும், சிந்திப்பதற்கும், மனிதர்கள், கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் உருவாக்க உதவும் எனவும் கூறினார். 

இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில், இந்தியா மிகச் சிறந்த பங்களிப்பை அளித்து வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர்மோடி, செயற்கை நுண்ணறிவில் உலகத்துக்கான உற்பத்தி மையமாக இந்தியா திகழ்ந்திட வேண்டும் என்பதே தமது விருப்பம் எனவும் குறிப்பிட்டார்.