செப்டம்பர் மாதத்தில் ஒண்டாரியோ பாடசாலைகள் தொடங்குமா?

பொது கருத்துக் கணிப்பின்படி, 10 GTA ஆரம்ப மாணவர்களின் பெற்றோர்களில் ஏழு பேர் செப்டம்பர் மாதத்தில் பாடசாலைகள் ஆரம்பிப்பதையும்  அதை தொடர்ந்து OCTOBER மாதத்தில் மேலும் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப எண்ணுவதாகவும் கருத்துக்கணிப்பு எடுத்துக்காட்டுகிறது.

உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் பெற்றோரைப் பொறுத்தவரை, 63 சதவிகிதத்தினர் இதேபோன்ற இரண்டு மாத இடைவெளியில் பகுதி பகுதியாக பாடசாலைகள் ஆரம்பிப்பதை விரும்புவதாகவும் கருத்துக்கணிப்பு கூறுகின்றது

பள்ளிகளை சுத்தமாக வைத்திருக்க தேவையான சுகாதார பொருட்களும் ஊழியர்களும் உள்ளனர் என்ற நம்பிக்கையில் பெற்றோர்கள் பிளவுபட்டுள்ளனர்

ஒண்டாரியோ மாகாண கல்வி அமைச்சர் பாடசாலைகளின் சங்கம் பாடசாலைகளின் பகுதி பகுதியான ஆரம்பத்தை இரண்டு வாரங்கள்  மட்டுமே நீடிக்கலாம் என்று தெரிவித்தார்