சென்னையில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து… மீட்பு பணிகள் தீவிரம்

சென்னை ராயப்பேட்டை புதுக் கல்லூரி எதிரில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் அமைந்துள்ளது. கடந்த 1977ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் 13 குடும்பங்கள் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர். ஓராண்டுக்கு முன்பு இந்தக் கட்டிடத்தை விலைக்கு வாங்கிய இம்ரான் என்பவர், பழமையான கட்டிடம் என்பதால் 13 குடியிருப்புவாசிகளையும் வெளியேற்றியுள்ளனர். ராஜியா பேகம் என்பவர் மட்டும் வீட்டை சொந்தம் கொண்டாடி குடும்பத்தினருடன் தொடர்ந்து வசித்து வந்ததால் கட்டிடத்தின் மீது வழக்கும் நிலுவையில் உள்ளது. 

இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணி அளவில் கட்டிடத்தின் கிரில் கதவு மட்டும் இடிந்து விழுந்துள்ளது. இதனால் அச்சமடைந்த ரசியா பேகம் தங்கள் குடும்பத்தினருடன் வீட்டை விட்டு உடனடியாக வெளியேறினார். இரவு 8.30 மணி அளவில் 5 மாடி கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்து தரைமட்டமானது. அதிர்ஷ்டவசமாக அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.