சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கும் கனமழை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. அதைத் தொடர்ந்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய இடி மின்னலுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சைதாப்பேட்டை ,அண்ணா நகர், எழும்பூர், சென்ட்ரல், அண்ணாசாலை ,கோயம்பேடு, வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இதேபோல் புறநகர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர்.