சென்னையில் ரூ.5,000 கோடி மதிப்பில் இரண்டடுக்கு மேம்பாலம்.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு!

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை எம்.ஆர்.சி நகரில் சந்தித்தார். இந்த சந்திப்பு தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது, சென்னையில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்கும் திட்டத்திற்காக சென்னை துறைமுகம் அருகே நிலம் ஒதுக்க தமிழக அரசு  முன் வந்துள்ளதாகக் கூறினார்.  கூடுவாஞ்சேரியில் இருந்து செட்டிபுலத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையை எட்டு வழி சாலையாக விரிவுபடுத்தவும்,  மதுரவாயலில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையை விரிவுபடுத்தவும் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.