சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை, 569370 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக நோய் தொற்று கண்டறியப்பட்ட 5679 பேரில், 8 பேர் வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் வந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் புதிதாக 1193 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 160929 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவிலிருந்து நேற்று ஒரே நாளில் 5626 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் இந்நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை, 513836 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, நேற்று 72 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவிற்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 9148 ஆக அதிகரித்துள்ளது.