சென்னையில் பிரபல நடிகர் கைது!

சென்னையில் நடிகர் ஷாம் திடீர் கைது என்று கூறப்படுகிறது.

தற்போது கூட உள்ளம் கேட்குமே இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என்று ஷாம் முடிவு செய்திருந்தார்.

இந்நிலையில் சென்னை நுங்கம் பாக்கத்திலுள்ள வீட்டில் பணம் வைத்து சூதாடியதாக நடிகர் ஷாம் உட்பட 13பேர் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுதலை எனவும் தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அது மட்டுமின்றி இரவில் இவரை கைது செய்தது பலருக்கும் அதிர்ச்சி ஆக உள்ளது.