சூர்யா வெளியிட்ட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்: இணையத்தில் வைரல்.

Actor Suriya Criticises and comments on Draft National Education Policy and  NEET Exam |EducationNews- Edexlive

நடிகர் சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் இன்னும் ஒரு சில நாட்களில் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான சிபிராஜ் நடித்த ’கபடதாரி’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இன்று சிபிராஜின் பிறந்தநாளை அடுத்து அவர் நடித்தி வரும் திரைப்படமான ’கபடதாரி’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சற்று முன்னர் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் ’கபடதாரி’ படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, சிபிராஜூக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பிரதீப் இயக்கியுள்ள ’கபடதாரி’ படத்தில் சிபிராஜ் ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இந்த படத்தின் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் வரும் ஜனவரியில் இந்த படம் ரிலீஸாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.