சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை தற்கொலை முயற்சி!

விஜய் நடித்த பிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. மேலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை விஜயலட்சுமி, தனது முகநூல் பக்கத்தில் கடைசியாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தற்கொலை முயற்சிக்கு காரணமாக சீமான் மற்றும் ஹரி நாடாரை குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து அவர் தெரிவித்ததாவது,தன்னுடைய மரணத்திற்கு பின்பு யாரும் சீமானை விட்டுவிட வேண்டாம் என்றும், அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்

தன்னை சீமானும் அவரைச் சேர்ந்த கட்சியினரும் மிகுந்த சித்திரவதை செய்வதாகவும், இந்த சித்திரவதையை தன்னால் சமாளிக்க முடியவில்லை என்றும், அதனால் தற்கொலை செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமி, அடையாறு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.