சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் 5 நிமிட காட்சி வெளியீடு !

Soorarai Pottru - Suriya38 Official First Look Reaction | Suriya | Sudha  Kongara - YouTube

நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படத்தின் ஐந்து நிமிடக் காட்சிகள் பின்னணி இசையுடன் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடித்து உருவாகியுள்ள திரைப்படம் “சூரரை போற்று”. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படம் வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் சூரரை போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனை நடிகர் சூர்யாவும் உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில் இன்று இப்படத்தின் ஐந்து நிமிடக் காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் ரூ. 6000 பணத்தை வைத்துக்கொண்டு, ஏர்லைன் ஆரம்பிக்கப்போகிறேன் என்று சொன்னால் யாரும் நம்புவார்களா? என்று சூர்யா பேசும் டயலாக் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.