சூரரை போற்று ஓடிடி ரிலீஸ் தேதி திடீர் தள்ளிவைப்பு? பரபரப்பு தகவல்

Soorarai Pottru: A piece of the sun- The New Indian Express

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கிய சூரரைப்போற்று திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இதனை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் திகதி ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் புரமோஷன் பணிகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது இதனால் இந்த படம் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அமேசான் பிரைம் வட்டாரங்களிலிருந்து வெளிவந்திருக்கும் தகவலின்படி சூரரைப்போற்று படத்தின் கிளியரன்ஸ் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ரிலீஸ் திகதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே கிளியரன்ஸ் கிடைத்தால் மட்டுமே ரிலீஸ் திகதி முறையாக அறிவிக்கப்படும் என்றும் இல்லையேல் இந்த படத்தின் ரிலீஸ் திகதி மாற்றி அமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் தகவலின்படி இந்த படத்தின் ரிலீஸ் திகதியை தள்ளி வைக்க அமேசான் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.