சூரரைப் போற்று படத்தைப் பார்க்க ..… மனம் விட்டுக் கேட்ட மாஸ்டர் பட இயக்குநர்

suriya vijay

நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்தின் டிரைலரைப் பாராட்டிய மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

சூர்யா தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று படம் அமேசான் பிரைமில் வரும் நவம்பர் 12 ஆம் தேதி ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது.

பிரபல நடிகர் நடிகைகள் சூரரைப் போற்று திரைப்படத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மாநகரம், கைதி, மாஸ்டர், போன்ற படங்களில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்தின் டிரைலரைக் குறித்து பாராட்டியுள்ளார்.

அதில், சூரரைப் போற்று திரைப்படத்தின் டிரைலர் அற்புதமாக உள்ளது. வரும் நவம்பர் 12 ஆம் தேதி இப்படத்தைக் காணவும் மாறாவின் அனுபவத்தைக் காண ஆவலாக இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜின் டுவீட்டுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

இவர் அடுத்து கமலஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள எவனென்று நினைத்தாய் என்ற படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.