சூரரைப் போற்று திரைப்படத்தைப் பற்றி ஒற்றைவரியில் விமர்சனம் சொன்ன மாதவன்!

New Bunty: R. Madhavan - Telegraph India

நடிகர் மாதவன் ரசிகர்களுடனான நேரலை உரையாடலில் சூரரைப் போற்று திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார்.

நடிகர் சூர்யா நடித்து உருவாகியுள்ள திரைப்படம் “சூரரை போற்று”. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படம் வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் சூரரை போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக அக்டோபர் 30 ஆம் திகதி வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனை நடிகர் சூர்யாவும் உறுதிப்படுத்தினார்.
வரிசையாக ஓடிடியில் வெளியாகும் படங்கள் எல்லாம் மோசமான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்த படமாவது நன்றாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ரிலீஸான தனது சைலன்ஸ் படத்தின் பிரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட போது ஒரு ரசிகர் சூரரைப் போற்று திரைப்படம் பார்த்து வீட்டீர்களா படம் எப்படி இருக்கிறது? என கேட்க அதற்கு மாதவன் ஒற்றைவரியில் ‘mindblowing’ எனக் கூறியுள்ளார்.