சூரரைப் போற்று “ஆகாசம்” வீடியோ பாடல் இதோ!

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான படம் ’சூரரைப்போற்று’. இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரித்தது. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். இவர்களுடன் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா பைலட் ஆபீஸராக நடித்துள்ள இப்படத்தில் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த  நம்பர் 12ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பினை பெற்றிருந்தது.

இந்நிலையில் சூரரைப் போற்று படத்தின் ” ஆகாசம்” பாடல் வீடியோவை படக்குழு யூடியூபில் வெளியிட்டுள்ளனர். காட்டுப்பயலே பாடலுக்கு அடுத்ததாக இந்த பாடல் ரசிகர்ளை கவர்ந்து லைக்ஸ் அள்ளியுள்ளது. இதோ அந்த பாடல் லிங்க்…