சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஆசை…. நடிகை திரிஷா

Trisha Shows How To Slay Monochrome Saree Style!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை திரிஷா. இவர் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் வெற்றி நடிகையாக வலம் வருகிறார், பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை திரிஷா படம் முழுக்க ரஜினிகாந்துக்கு ஜோடியாக வரவேண்டும் என தன் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த். அவருக்கு உலகெங்கும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். அவருடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று நினைத்துக்கொண்டுள்ளனர். இந்த வரிசையில் திரிஷாவும் இணைந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

நான் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன்… அந்த வாய்ப்பு பேட்ட படத்தில் எனக்கு அமைந்தாலும் என் கதாப்பாத்திரம் மிகவும் சிறியது. இன்னொரு படத்தில் அவருக்கு ஜோடியாக இரண்டரை மணிநேரமும் வரவேண்டும் என்பது என் ஆசை. அது நிறைவேறினால் நான் மகிழ்ச்சி அடைவேன் எனத் தெரிவித்துள்ளார்.