சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு கொரோனா உறுதி – அதிர்ச்சி தகவல்!

Chiranjeevi, the megastar who beat Big B as India's highest paid actor -  regional movies - Hindustan Times

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

சிரஞ்சீவி நடித்த “சைரா நரசிம்ம ரெட்டி” படத்தை அடுத்து அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ’ஆச்சார்யா’. பிரபல இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளார். சிரஞ்சீவியின் 65 ஆவது பிறந்தநாள் மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆச்சார்யா படத்தின் மோஷன் போஸ்டரைப் படக்குழு வெளியிட வைரல் ஹிட்டாகி வருகிறது.
இந்நிலையில் கொரோனா காரணமாக தாமதமான படப்பிடிப்பு நவம்பர் 9 ஆம் திகதி மீண்டும் தொடங்க இருந்தது.

இந்நிலையில் படப்பிடிப்புக்கு முன்னர் சிரஞ்சீவி உள்ளிட்ட படக்குழுவினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் தன்னைத் தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் தன்னை சந்தித்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொண்டு சோதனை செய்துகொள்ளும் படி கேட்டுக்கொண்டுள்ளார்.