சூதாட்ட விளம்பரத்தில் நடித்தது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Years after dating rumours, Tamannaah Bhatia opens up about working with  Virat Kohli in an ad | Hindi Movie News - Times of India

ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்தது தொடர்பாக கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும், நடிகை தமன்னாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பலர் பணத்தை இழப்பதுடன், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. கடந்த 10 நாட்களில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த 3 பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட செல்போன் ஆப் விளம்பரத்தில் நடித்த விராட் கோலி மற்றும் தமன்னா மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த பிப்ரவரி மாதம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பான விசாரணையில் பொதுமக்கள் பலரும் தங்களை பின் தொடர்கிறார்கள் என்று தெரிந்தும் இந்த சூதாட்ட விளம்பரத்தில் நடித்தது ஏன் என கேள்வி எழுப்பி உயர்நீதிமன்ற கிளை விராட் கோலி மற்றும் தமன்னாவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வது குறித்து விளக்கமளிக்க மத்திய மாநில அரசுகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.