சுஷாந்த் வங்கிக் கணக்கில் இருந்து மாதா மாதம் சென்ற தவணை தொகை – யாருக்கு தெரியுமா?

Sushant Singh Rajput's psychiatrist records statement with Mumbai Police |  Hindi Movie News - Times of India

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ததில் அவரது முன்னாள் காதலி அங்கிதாவின் வீட்டு தவணை சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் தனது 34 ஆவது வயதில் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்பதும் இந்த தற்கொலை குறித்து மும்பை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. ஆனால் சுஷாந்தின் மரணத்துக்கு பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியல் மற்றும் அவரது முன்னாள் காதலி கொடுத்த மன அழுத்தம் என பலக் காரணங்கள் சொல்லப்பட்டு வந்தன. இப்போது இந்த வழக்கு சிபிஐ வசம் உள்ளது.

சுஷாந்தின் தந்தை அளித்த புகாரின் பெயரில் சுஷாந்த் சிங்கின் காதலி ரியா, அவரது தந்தை இந்திரஜித், சகோதரர் சோவிக், அவரது மேலாளர் சாமுவேல் மிரான்டா, ஸ்ருதி மோடி ஆகிய 6 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டுதல், நம்பிக்கை மோசடி, திருட்டு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் சுஷாந்தின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில் அவரது கணக்கில் இருந்து அவரின் முன்னாள் காதலியும் தோழியுமான அங்கீதாவின் 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டின் மாதத்தவணை சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதனை அங்கீதா மறுத்துள்ளார்.