சுஷாந்த் தற்கொலை வழக்கு… ரியாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு!

Left the house sharing with Sushant after a fight, Rhea tells police after  nine hours of grilling - INDIA - GENERAL | Kerala Kaumudi Online

சுஷாந்தின் முன்னாள் காதலி ரியா சக்ரபோர்த்தியின் நீதிமன்றக் காவல் இந்த மாதம் 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது காதலி ரியா கைது செய்யப்பட்டுள்ளார். ரியா சுஷாந்திற்கு போதை பொருட்கள் வழங்கியதாக தொடரப்பட்ட விசாரணையில் மேலும் பல பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குனர்களுக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது சம்மந்தமான வழக்கை இப்போது சிபிஐ விசாரித்து வருகிறது. ரியா சக்ரபோர்த்திக்கு அளிக்கப்பட்ட நீதிமன்றக் காவல் இன்றோடு முடியும் நிலையில் மேலும் அவரது காவலை இம்மாதம் 20 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளனர். இந்த நீட்டிப்பு போதைப் பொருள் தடுப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 18 பேரின் நீதிமன்றக்காவலும் வருகின்ற 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.