சுற்றுலாப்பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் கிடையாது-கிரீஸ்.

பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் எங்கள் நாட்டுக்கு வந்தால் அவர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் கிடையாது என அறிவித்துள்ளது கிரீஸ்.

நாட்டின் வருவாய்க்கு சுற்றுலாப்பயணிகளை நம்பியிருக்கும் கிரீஸ், வெறுமையாய்க் கிடக்கும் கடற்கரைகளையும் ஹொட்டல்களையும் நிரப்பும் திட்டங்களை துவக்கியுள்ளது.

கிரீஸ் சுற்றுலாத்துறை அமைச்சரான Harry Theoharis, பிரித்தானியாவுக்கு சுற்றுலா செல்லும் கிரீஸ் நாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு பிரித்தானியா தனிமைப்படுத்துதலிலிருந்து விலக்கு அளிக்குமானால், தாங்களும் பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலிலிருந்து விலக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் பிரித்தானிய பணி மற்றும் ஓய்வூதிய செயலரான Therese Coffey, நம் நாட்டில் மக்கள் சுற்றுலா செல்ல பல campsiteகள் உள்ளன.

கூடுமானால், அவை ஜூலை மாதத்திலிருந்து சுற்றுலாப்பயணிகளுக்கு திறந்துவிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.