சும்மா உட்கார்ந்துக்கிட்டே போஸ் கொடுத்தா எப்புடி…?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.

அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலிருக்கும் சாக்ஷி அகர்வால் தினந்தோறும் செம்ம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஒர்க் அவுட் செய்யும் வீடியோ , போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பினார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் kawasaki பைக்கில் அமர்ந்து செம ஸ்டைலா போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஸ்டாண்ட் போட்ட பைக்கில் உட்கார்ந்து சீன் போட்டால் பத்தாது வண்டிய ஓட்டி காட்டு என ரசிகர்கள் சவால் விட்டு வருகின்றனர்.