சுதா கொங்கரா இயக்கத்தில் பிரபல நடிகை…. ரசிகர்கள் வாழ்த்து.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்கள் தற்போது அந்தாலஜி எனப்படும் குறும்படங்களை நோக்கி வெப் சீரீஸ் பக்கமாய்ச் சென்றுள்ளனர்.

சுதா கொங்கரா இயக்கியுள்ள வெப் சீரிஸின் பின்னணி | sudha kongara web series -  hindutamil.in

இந்நிலையில் இயக்குநர் வெற்றிமாறன், கவுதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட இயக்குநர்கள் இணைந்து அந்தாலஜி படத்தை இயக்கி வருகின்றனர்.

இந்நிலையில் அப்படத்தின் தலைப்பு இன்று வெளியாகியுள்ளது. அதன் பெயர் பாவ மன்னிப்பு ஆகும்.

நெட்பிளிக்ஸில் தயாராகும் இப்படம் விரையில் ஓடிடியிலும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரபல நடிகை பவானி சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் நான் எனது அடுத்த பிரொஜெக்ட் இயக்குநர் சுதா கொங்கராவுடன் இணைந்து பணியாற்றவுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய தொடர் ஐந்து இயக்குநர்களின் நேர்த்தியான கதையில் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் படைப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ளது புத்தம் புதுக் காலை என்ற வெப் சீரிஸ் ஆகும்.