சீரக பானம் தயாரிக்கும் முறையும் பயன்களும் !!

சீரகத்தை கொதிக்க வைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்! | POPxo

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி, அதில் 1 டீஸ்பூன் சீரகத்தைப் போட்டு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நிறம் மாறியதும், அடுப்பை அணைத்து நீரை வடிகட்டி குளிர வைத்தால், சீரக பானம் தயார்.

இல்லாவிட்டால், நன்கு கொதிக்க வைத்த சுடுநீரை ஒரு டம்ளர் எடுத்து, அதில் சிறிது சீரகத்தைப் போட்டு 5 நிமிடம் மூடி வையுங்கள். பின் நீரை வடிகட்டினால், பானம் தயார்.

குடிக்கும் முறை: சீரக பானத்தை வெதுவெதுப்பான நிலையில் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் நல்லது. இல்லாவிட்டால், சீரக நீரை க்ரீன் டீயுடன் சேர்த்தும் குடிக்கலாம். இன்னும் எளிய வழி வேண்டுமானால், குடிக்கும் நீருடன் சீரக நீரை சேர்த்து கலந்து, நாள் முழுவதும் குடிக்கலாம்.

நன்மைகள்:

  • சீரக தண்ணீர் செரிமான மேம்படுத்துவதோடு, செரிமான பிரச்சனைகளான வாய்வுத் தொல்லை, வயிற்று உப்புசம், வயிற்றுப் போக்கு, குமட்டல் போன்றவற்றில் இருந்தும் நிவாரணம் அளிக்கும்.
  • சீரகம் கணையத்தில் நொதிகளின் உற்பத்தியைத் தூண்டி, செரிமானம் சிறப்பாக நடைபெற உதவும்.
  • இரவில் தூக்கம் வராமல் அவஸ்தைப்படுபவர்களா நீங்கள்? அப்படியெனில் சீரகத் தண்ணீர் அதற்கு நல்ல தீர்வை வழங்கும்.
  • சாதாரணமாக தூக்க பிரச்சனை இருப்பவர்கள், இரவில் சீரக நீரைக் குடிப்பதோடு, ஒரு வாழைப்பழத்தையும் சாப்பிட்டு வந்தால், இரவில் நல்ல நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.
  • சீரகம் டாக்ஸின்களை உடலில் இருந்து வெளியேற்றி, உடலின் மெட்டபாலிச அளவை அதிகரிக்கும்.
  • சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை சீரக தண்ணீர் மேம்படுத்தும்.
  • சீரக நீர் சிறுநீரகங்களின் வலிமையைப் பராமரிப்பதில் பெரிதுவும் உதவியாக இருக்கும்.