சீன குழு பி.சி.ஆர்.இயந்திரம் திருத்தம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு

முல்லேரியா வைத்தியசாலையில் செயலிழந்துள்ள பி.சி.ஆர்.இயந்திர திருந்த பணியை  நாளைக்குள் (திங்கட்கிழமை) நிறைவு செய்ய முடியுமென இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன குழு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான சீன தூதரகம் தனது ருவிட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளது.

பி.சி.ஆர்.இயந்திரத்தின் தானியங்கி மூலக்கூறு பிரித்தெடுத்தலுக்கான கூறு, ஓரளவு விலகி இருந்ததாக சீனாவிலிருந்து வருகை தந்துள்ள தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பி.சி.ஆர்.இயந்திரம் சுமார் 10 மணிநேரம் முன்னெடுக்கப்பட்ட திருத்தப் பணிகள் காரணமாக  சீர் செய்யப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, நாளை முதல் பி.சி.ஆர்.இயந்திரத்தின் செயற்பாடுகளானது வழமைபோல் இயங்கும்” என குறிப்பிட்டுள்ளார்.