”சீனா இப்படி செய்திருக்கக் கூடாது”- அதிபர் ட்ரம்ப் கடும் விமர்சனம்!

கொரோனா தொடர்பாக அதிபர் ட்ரம்ப், சீனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு சீனாதான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும், இதற்காக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் அதன் பெயர் ‘கொரோனா வைரஸ்’ கிடையாது, ‘சீன வைரஸ்’ என ட்ரம்ப் மீண்டும் விமர்சித்துள்ளார். அதனால் கொரோனா வைரஸ் என அதனை அழைக்க வேண்டாம் என்றும் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசியுள்ளார். சீனாவின் நடவடிக்கைகள் மிகவும் தொந்தரவை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸை சீனாதான் வெளியே விட்டதாகவும், ஆனால் அவர்கள் அப்படி செய்திருக்கக் கூடாது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில், ‘உலக வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதார நாடாக அமெரிக்காவை கட்டமைத்துள்ளோம். கொரோனாவால் சரிவை சந்தித்த பொருளாதாரத்தை மீட்டு வருகிறோம். சீன வைரஸுக்கு எதிரான போரில் வரலாற்று சிறப்புமிக்க ஒரு அறிவிப்பு வர வேண்டும் என நான் விரும்புகிறேன். நான் மீண்டும் அதிபரானால் பொருளாதாரத்தை மேலும் உயர்த்த முடியும்’ என தெரிவித்துள்ளார்.