சிவகார்த்திகேயன் சம்பளத்தில் பங்கு கேட்கும் அனிருத்… டுவிட்டரில் உண்டான சர்ச்சை!

Sivakarthikeyan wants to produce Anirudh's debut film | KollyInsider

நடிகர் சிவகார்த்திகேயன் தான் வாங்கும் சம்பளத்தில் பாதியை அனிருத்துக்கும் இமானுக்கும் அளிக்கவேண்டும் என ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் அவருக்கு ஏணிப்படிகளாக அமைந்தவை அவரது சினிமா பாடல்கள். அந்த வகையில் அவரது பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்து ஹிட்டாக்கி கொடுத்தவர்கள் அனிருத்தும், டி இமானும்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் டுவிட்டரில் சிவகார்த்திகேயன் தான் வாங்கும் சம்பளத்தில் பாதியை அனிருத்துக்கும், டி இமானுக்கும் கொடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். அந்த டிவீட் இப்போது மிகப்பெரிய கவனம் பெற்றிருப்பதற்கு காரணம் அதை அனிருத் லைக் செய்திருப்பதுதான். பலருக்கும் அனிருத்தின் இந்த செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.