சில பகுதிகள் இன்று தனிமைப்படுத்தல் ஊரடங்கு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் சில பகுதிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 05 மணி முதல் தனிமைப்படுத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.குருநாகல், களுத்துறை, கேகாலை மாவட்டங்களின் 7 பிரதேசங்களே இவ்வாறு தனிமைப்படுத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, குருநாகல் மாவட்டத்தின் குருநாகல் நகராட்சி மன்ற பகுதி, குளியாப்பிடிய பொலிஸ் பிரிவு ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை பொலிஸ் பிரிவு, இங்கிரிய பொலிஸ் பிரிவு, வேகட ‍மேற்கு கிராமசேவகர் பிரிவு ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல பொலிஸ் பிரிவு, மாவனெல்லை பொலிஸ் பிரிவு ஆகிய பகுதிகளிலும் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது.ஏனைய தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடங்கள் அவ்வாறே தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.