சில பகுதிகளுக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு அறிவிப்பு

கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காக சில பகுதிகளுக்கான ஊரடங்கு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி, அகலவத்தை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கொரக்கொட, பேரகம, அகலவத்தை, தாபிலிகொட, கெக்குலந்தல வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.அதேபோல், பாலிந்தநுவர பிரதேச செயலக பிரிவின் பெல்லன கிராம உத்தியோகத்தர் பிரிவும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இந்நிலையில் குறித்த பகுதிகளில் மறுஅறிவித்தல் வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.