சிறுமி ஹிசாலினிக்கு நீதிக்கோரி எல்ஜின் தோட்டத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் : குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தல்

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்ட நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி ஹிசாலினிக்கு நீதிக்கோரி, லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்ஜின் பெருந்தோட்டத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை பத்து மணியளவில் எல்ஜின் தோட்டத்தில் ஆரம்பமாகிய இந்த ஆர்ப்பாட்டம் எல்ஜின் மெரயா பிரதான வீதியூடாக ஊவாக்கலை தோட்டம் வரை பேரணியாக சென்றது.

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் இனிவரும் காலங்களில் இதுபோன்ற ஒரு துர்பாக்கிய சம்பவம் அரங்கேறக்கூடாது எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.