சிம்கோ பகுதியில் உள்ள குளத்தில் உடல் மீட்பு – காணாமல் போன 15 வயது சிறுவனாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம்

தெற்கு சிம்கோ ( Simcoe ) பொலீசாரும் ஒண்டாரியோ மாகாண காவல்துறையினரும் (OPP) ஒரு உடலை தாங்கள் அந்த பகுதியில் உள்ள உள்ளூர் குளத்தின் அருகே கண்டுபிடித்ததாகவும் அது கடந்த சில நாட்களாக காணாமல் தேடப்பட்டு வந்த பிராட்போர்டை(Bradford) சேர்ந்த 15 வயது சீம்ஜெரெஸ்கி (SiemZerezghi ) ஆக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் காவல்துறை அதிகாரி John Van Dyke  தெரிவித்தார்.

ஒன்ராறியோ மாகாண பொலிஸ் நீருக்கடியில் தேடல், மற்றும் மீட்பு பிரிவு ஆகியவற்றின் உதவியுடன் குளத்திலிருந்து உடல் மீட்கப்பட்டது.இது ஒரு சந்தேகத்துக்கு உரிய மரணமா என்பது குறித்து பொலீசார் கருத்து எதுவும் வெளியிடவில்லை.