சித் ஸ்ரீராமின் மெல்லிய குரலில் “முருங்கைக்காய் சிப்ஸ்” முதல் சிங்கிள் வீடியோ!!

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த சாந்தனுவுக்கு அதன் பின்னர் திரையுலகில் வாய்ப்புகள் குவிந்து வருவது குறித்த செய்திகள் ஏற்கனவே தெரிந்ததே. அந்த வகையில் தற்போது அவர் ’முருங்கைக்காய் சிப்ஸ்’ என்ற திரைப் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

சாந்தனுவுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ள இந்த படத்தை ஸ்ரீஜார் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் கே.பாக்யராஜூம் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மனோபாலா, மதுமிதா, யோகி பாபு, ரேஷ்மா உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.

தரன்குமார் இசையில் மேஷ் ஒளிப்பதிவில் உருவாகவுள்ள இந்த படத்தை லிப்ரா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ஏதோ சொல்ல என்ற பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது. சித் ஸ்ரீராமின் குரலில் ரொமான்டிக் உணர்வை ஏற்படுத்தும் இந்த பாடல் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.