சிக்கிம் மாநிலத்திலும் பட்டாசு விற்பனைக்கு தடை!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் பட்டாசு வெடித்து அனைவரும் தீபாவளியை கொண்டாடி மகிழ்வார்கள். ஆனால், இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தலை காரணம் காட்டி, ராஜஸ்தான், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய அம்மாநில அரசுகள் அண்மையில் தடை விதித்தன. மேலும் டெல்லியில் இயற்கைக்கு ஆபத்து இல்லாத பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது, அந்த வரிசையில் சிக்கிம் மாநிலத்திலும் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்க மற்றும் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதாக சிக்கிம் மாநில தலைமை செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால் பட்டாசு தொழிலை மட்டுமே நம்பி உள்ளவர்கள், கடும் பாதிப்பை சந்திக்கும் நிலை உருவாகி உள்ளது.