சிக்கலில் சந்தானம் படம் – கடைசி நேரத்தில் உதவிய மதுரை அன்புச்செழியன் !

Biskoth Official First Look – Teaser Update | Santhanam | R.Kannan |  பிஸ்கோத் – சந்தானம் - YouTube

நடிகர் சந்தானத்தின் சமீபத்தைய படமான பிஸ்கோத் படத்தின் ரிலிஸின் போது கடைசி நேரத்தில் பண உதவி செய்துள்ளாராம் மதுரை அன்புச் செழியன்.

காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக புரமோஷன் ஆன நடிகர் சந்தானம் பல படங்களில் வரிசையாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த ’டகால்டி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அடுத்ததாக பிரபல இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்த பிஸ்கோத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. கடைசி நேரத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டுமென்றால் ஒரு கோடி ரூபாய் வரை கட்டவேண்டும் என சொல்லப்பட்ட நிலையில் சந்தானம் 50 லட்சம் கொடுத்து உதவியுள்ளார்.

மீதி பணத்தை பிரபல சினிமா பைனான்சியரான மதுரை அன்புச் செழியன் அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் செய்த உதவியால்தான் கடைசி நேரத்தில் அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடிந்தது என சொல்லப்படுகிறது.