சம்பளம் வாங்காமல் படம் நடித்த நடிகர்

தமிழ் திரையுலகில் தற்போதுள்ள முன்னணி நடிகர்களின் சம்பளம் மட்டுமே பல கோடிக்கணக்கில் இருக்கிறது.

அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், தல அஜித் போன்ற நடிகர்களின் சம்பளம் பல மடங்காக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தன்னுடைய 100வது படம் தோல்வி அடைந்ததற்காக அதே தயாரிப்பு நிறுவனத்திற்கு அடுத்த பட வாய்ப்பை ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்த நடிகர் இருக்கிறார் என்றால் ஆச்சரியமாக தான் இருக்கும்.

ஆம் அந்த நடிகர் வேறு யாரும் இல்லை.நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான், ஸ்ரீ ராகவேந்திரா படம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்த நிலையில் அடுத்ததாக அதே கவிதாலயா கம்பெனிக்கு ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் வேலைக்காரன் எனும் படத்தை நடித்து கொடுத்தாராம்.