சம்பளம் குறைவாகப் பெற்று நடிக்கவும் தயார் – ராஷிகண்ணா.

முதன்முறையாக அட்டை படத்திற்கு கவர்ச்சி போஸ் கொடுத்த ராஷிகண்ணா!

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷிகண்ணா. இவர் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் கூறியுள்ளதாவது:

படத்தில் நடிக்கும்போது கதை தேர்வில் நான் எச்சரிக்கையாக இருப்பேன். ஒருவேளை கதை பிடிக்கவில்லை என்றால் எத்தனை பணம் தந்தாலும் நான் நடிக்க மாட்டேன்.

ஒரு நடிகை என்பவருக்கு தனது ஆத்ம திருப்தி தான் முக்கியம் பணம் அல்ல… படம் தோல்வி அடைவது ஏன் எனக் கேட்டால்… அது கதை சொல்லும் விதம் வேறுவிதமாக உள்ளது. அது படமாக வெளியாகும்போது வேறுவிதமாக வெளியாகிறது. ஆனால் நல்ல கதையாக இருந்தால் சம்பளத்தைக் குறைத்துக்கொள்ளவும் நான் தயார் எனத் தெரிவித்துள்ளார்.