சன் பிக்சர்ஸ் செய்தது நியாயமா? அதிருப்தியில் தயாரிப்பாளர்கள்!

சன் பிக்சர்ஸ் தனுஷ் நடிக்க இருக்கும் ஒரு படத்தை தயாரிக்க உள்ள நிலையில் தனுஷின் சம்பளத்தைப் பல மடங்கு உயர்த்தியுள்ளதாம்.

நடிகர் தனுஷின் சினிமா வாழ்க்கையில் அசுரன் வியாபார ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால் அதன் பின் வந்த பட்டாஸ் படுதோல்வி அடைந்துள்ளது. இதனால் அசுரனின் முழுவெற்றிக்கும் அவர் காரணமல்ல. வெற்றிமாறனும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. அதனால் தனுஷ் தனக்கான சம்பளமாக 10 கோடி ரூபாய் வரை வாங்கி வந்தார்.

ஆனால் இப்போது சன் பிக்சர்ஸ் தனுஷை வைத்து ஒரு படம் எடுக்க உள்ள நிலையில் அவரின் சம்பளத்தை பல மடங்கு ஏற்றி விட்டுள்ளதாம். அவர்கள் தனுஷிடம் 40 கோடி ரூபாயைக் கொடுத்து 25 கோடியை சம்பளமாக எடுத்துக்கொள்ள சொல்லி மீதி 15 கோடியில் படம் எடுத்துத் தர சொல்கிறார்களாம். இது தனுஷுக்கே இன்ப அதிர்ச்சியாய் அமைய, இப்போது மற்ற தயாரிப்பாளர்களிடமும் அதே சம்பளத்தை எதிர்பார்க்கிறாராம் தனுஷ். ஆனால் தனுஷுக்கு அவ்வளவெல்லாம் மார்க்கெட் இல்லை என புலம்புகிறார்களாம் தயாரிப்பாளர்கள்.