சந்தானத்தின் பிஸ்கோத் வெற்றி படமா? வெளியான வசூல் நிலவரம்!

Editing work of Santhanam's Biskoth begins - DTNext.in

பிஸ்கோத்தின் படத்தின் வசூல் நிலவரம் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.

காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக புரமோஷன் ஆன நடிகர் சந்தானம் பல படங்களில் வரிசையாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த ’டகால்டி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அடுத்ததாக பிரபல இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்த பிஸ்கோத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. கடைசி நேரத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டுமென்றால் ஒரு கோடி ரூபாய் வரை கட்டவேண்டும் என சொல்லப்பட்ட நிலையில் சந்தானம் 50 லட்சம் கொடுத்து உதவியுள்ளார். மேலும் அன்புச்செழியனும் அதுபோல பணம் கொடுத்து இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கண்ணனுக்கு உதவி செய்துள்ளார்.

இந்நிலையில் படம் வெளியாகி ஒரு வாரத்தை தாண்டி ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் இந்த படத்தின் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மார்ச் மாதமே எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அப்போதே ரிலீஸ் ஆகி இருந்தால் பெரியளவில் வட்டியைக் குறைத்து இருக்கலாம். ஆனால் 8 மாதகாலமாக முடங்கிக் கிடந்ததால் மேலும் சில கோடிகள் வட்டி கூடியுள்ளது.

இந்நிலையில் ஒட்டுமொத்தமாக திரையரங்க உரிமை, சேட்டிலைட் உரிமை மற்றும் டிஜிட்டல் உரிமை என எல்லாவற்றையும் சேர்த்து 9 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் தயாரிப்பாளருக்கு 2 கோடிரூபாயும் விநியோகஸ்தருக்கு 1 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது.