சதோசவின் தேவைகள் குறித்து அமைச்சருக்கு செல்வம் கடிதம்

மன்னார் மாவட்டத்தில் லங்கா சதோச நிறுவனங்களின் தேவை குறித்து வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார். 


அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மன்னார் மடு பிரதேச செயலகப்பிரிவில் இயங்கிவரும் லங்கா சதோசவினை மூடுவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினை 6 மாதங்களுக்கு பிற்போடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மன்னார் நானாட்டானில் மக்களின் நலன் கருதி லங்கா சதொச ஒன்றினையும் ஆரம்பித்து வைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.