சதம் அடித்த வெங்காய விலை..பொதுமக்களும், வியாபாரிகளும் வேதனை

வரத்து குறைவினாலும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கன மழையாலும் தமிழகத்தில் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள்  உயர்ந்து வந்தது. இந்நிலையில் இன்று விழுப்புரத்தில் பெரிய வெங்காயம் 1 கிலோ இன்று 100 ரூபாய் விற்பனை செய்யப்பட்டது. விலையேற்றம் காரணமாக வியாபாரிகள் குறைவான அளவில் வெங்காயம் வாங்கிச் சென்றனர். 

விலை உயர்வை கண்டித்து  கோவை காட்டூர் பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெங்காய மாலை அணிந்தபடி வெங்காய விலை உயர்வைக் கண்டித்து, முழக்கங்களை எழுப்பிய அவர்கள் வெங்காயத்திற்கு மாலை அணிவித்து நூதனப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.