சக நடிகைக்கு பாலியல் தொல்லை – கைது செய்யப்பட்ட நடிகர்!

பாலியல் வழக்கில் கைதான விஜய் ராஸுக்கு ஜாமீன் | Vijay Raaz granted bail in  molestation case after arrest - hindutamil.in

சிவகார்த்திகேயன் நடித்த காக்கி சட்டை படத்தில் நடித்த விஜய் ராஸ் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலிவுட்டில் அறியப்பட்ட நடிகராக திகழ்ந்து வருகிறார் விஜய் ராஸ். இவர் டெல்லி பெல்லி, சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் வித்யா பாலன் உள்ளிட்டோர் நடிக்கும் ஷெர்னி படத்தின் படப்பிடிப்பின் போது சக நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமாக நடிகை அளித்த புகாரில் மகாராஷ்டிரா போலிஸாரால் விஜய் ராஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான காக்கி சட்டை படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.