கோவில்குளத்தில் மோகனின் செயற்பாடு

வவுனியா நகரசபைக்குட்பட்ட கோவில்குளம் பகுதியில் தெற்கிலுப்பை குளம் பிரதான வீதியின் உள்ளக வீதியான செபர்த்தியார் கோவில் வீதியானது தார் வீதியாக  செப்பனிடும் பணிகள் ஆரமபமாகின .

வவுனியா கோவில் குளம் , கோவில்புதுக்குளம் பத்தாம் வட்டாரமான  பகுதிக்கு, புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் , வவுனியா நகரசபை உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் மோகனால்   ஒதுக்கப்பட்ட பாதீட்டு நிதியிலிருந்து குறித்த வீதி கிறவல் இடப்பட்டு தாரிட்டு செப்பனிடும் பணியின் முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கபட்டன  .

தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகள் படி தனது வட்டார கிராமமான கோவில் குளம் , கோவில்புதுக்குளம் பகுதியில் 95 வீதமான நகரசபை வீதிகள் செப்பனிடும் பணி நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும்,  அனைத்து வீதிகளும் செப்பனிடப்படும் என நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் மோகன் தெரிவித்தார்.