கோவிட்19 வைரஸ் தொற்று: சிறைச்சாலையில் முதலாவது மரணம் பதிவு !

ராகமை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த 82 வயதுடைய மஹர சிறைச்சாலை கைதி ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த ஆயுள் தண்டனைக் கைதி உடல்நலக் கோளாறு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த கைதிக்கு முதலாவது முறை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியாகவில்லை. இருப்பினும் 2ஆவது தடவையாக அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். சோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளது.