கோவிட் -19 நிலவரம் – இத்தாலி, ஜேர்மனி, கிரேக்கம் போன்ற நாடுகளின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

இத்தாலியில் மேலும் 1,638 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 297,000 ஆக அதிகரித்துள்ளன.

அத்தோடு புதிதாக 24 இறப்புகளைச் சேர்த்தது, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 35,692 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இது இங்கிலாந்துக்கு அடுத்த ஐரோப்பாவில் இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை கிரேக்கத்தில் புதிதாக 240 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 14,978 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கிரேக்கத்தில் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 331 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனியில் குறைந்தது 1,345 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து நாட்டில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 271,415 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

றொபேர்ட் கோச் நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி, இரண்டு புதிய இறப்புகளுடன் நாட்டின் மொத்த இறப்பு எண்ணிக்கை 9,386 ஆக உயர்ந்துள்ளது.