கோவிட் 19 தொற்றை கட்டுப்படுத்த பீல் பிராந்தியத்தில் புதிய கட்டுப்பாடுகள்

ஒன்டாரியோவில் கோவிட் 19 தொற்று அதிகமாக பரவும் இடங்களில் ஒன்றான பீல் பிராந்தியத்தில் அந்த தொற்றை கட்டுப்படுத்த மாகாண அரசு பல புதிய கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த இருக்கின்றது.அடுத்த வாரத்தில் இருந்து இந்த புதிய நடைமுறைகள் அமுலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதன் படி வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்களில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் திருமண நிகழ்வு மற்றும் பெரிய அளவில் ஒன்று கூடல்களை நடத்துவதற்க்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .மேலும் இந்த கட்டுப்பாடுகள் தொடர்பாக பீல் பிராந்திய தலைமை வைத்திய அதிகாரி பீல் பிராந்தியத்தில் தொடர்ந்து இந்த கோவிட் 19 தொற்று அதிகமாக பரவி வருவதால் பீல் பிராந்தியத்தில் இவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவேண்டியது மிகவும் அவசியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.